Our New Website Please Visit

Monday 12 January 2015

12th STANDARD TAMIL PAPER II PUBLIC MODEL EXAM 2015

                       LEAD BY KNOWLEDGE COACHING CENTRE AND TUTORIAL 
                                              TAMIL PUBLIC  MODEL EXAM -2015                                       




                                                                                                    பதிவு எண்

                                      பகுதி - I   --   தமிழ் - இரண்டாம்   தாள்
                                                 Language - Part A - Tamil - Paper II
                  (உரைநடை , துனைபடாம், செய்யுள் நயம் பாராட்டல்,   
                                       தமிழாக்கம்,படைப்பாற்றல் , மொழித்திறன் )

நேரம் : 3 மணி ]                                                                          [ மொத்த மதிப்பெண் :80

அறிவுரை :   (1)  அனைத்து வினாக்களுக்கும் சரியாக அச்சுப் பதிவாகி     
                                   உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும் .
                                   அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காநிபாளரிடம்
                                   உடனடியாக தெரிவிக்கவும்.
     
                          (2) நீலம் அல்லது கருப்பு  மையினை மட்டுமே எழுதுவதற்கு
                              பயன்படுத்த வேண்டும்

குறிப்பு : விடைகள் தெளிவாகவும், குறிபிட்ட அளவினதாகவும் மற்றும்  -                   சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

I.  பின்வரும்  வினாகளுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை எழுதுக

 1. நாடக தமிழின் சிறப்பியலபுகளாகச் சூரியநாராயண சாத்ரியர் பருதிமாற் கலைஞர்  கூறுவன யாவை ?
2. நாடு என்னும் பற்றால் சமரசத்தை இழப்பதுபற்றித் திரு.வி.க உறைபன யாவை ?
3.கீட்ஸ் , ஜான்ரஸ்கின், பவணந்தி முனிவர் ஆகியோர் கூறும் கவிதையின் இயல்புகள் யாவை ?
4.ஈகைப் பண்பில்,தமிழ்மக்கள் சிறந்து விளங்கிய தன்மையை விளக்குக.
5.அக்காலக்  கல்வியே சிறந்ததாக, இளவழகனார் கருதுவதற்குக் காரணங்கள் யாவை ?

II. பின்வரும்  வினாகளுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை எழுதுக.

  6. மாடு என்பது செல்வம் போலக் கருதப்பட காரணங்கள் யாவை ?
  7. நீதிநூல்களின் பொதுவான இயல்பினைக் குறித்து எழுதுக .
  8. முதல் தடுமாற்றம் என்று மூ.வ. குறிப்பது யாது ?
  9. தமிழகக்  குடைவரைக் கோவில்களைப்  பற்றி  எழுதுக.
10. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எது ? ஏன் ?

III. பின்வரும்  வினாகளுள் எவையேனும்  ஒன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் இருபது வரிகளின் மிகாது விடை எழுதுக.

11. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் வகைமை குறித்துப்
     பருத்திமாற்கலைஞர் உரைப்பனவற்றை தொகுத்து வரைக .
12. மனித வாழ்வே பெரியது என்னும் அடிப்படையில் மூ .வ. உரைக்கும் எதிர்காலக் கனவு யாது ?

IV.பின்வரும்  வினாகளுள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு  மிகாது விடை எழுதுக.

13. 'வேலி'  அல்லது  'ஒவ்வொரு கல்லாய்' என்னும்  சிறுகதையின் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக .
                                                                   அல்லது
 'பழிக்குப் பழி' அல்லது 'கழிச்சல் ' என்னும் சிறுகதையில் இடம்பெறும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நாடகமாக எழுதுக.

14. 'மண்'  அல்லது  'மகன்' என்னும் சிறுகதையில் நும்மணம் கவர்ந்த கதைமாந்தர் குறித்து திறனாய்வு செய்க.
                                                                    அல்லது
'பால்வண்ணம் பிள்ளை' என்னும் சிறுகதையில்  வரும் பால்வண்ணம் பிள்ளை வாழ்வில் மனைவியய் மதித்து முன்னேறியதாக கற்பனைக் கதை எழுதுக
                                                                      அல்லது

லக்ஷ்மி என்னும் பெண்ணிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை
அவள்  எபோதும் தான் மிக அழகாக இர்ருப்பதாக நினைத்து கொள்வாள் அவள் சென்னைக்கு சென்று சினிமவில் நடித்து வெற்றிபெற்றதை போல் கற்பனை கதை எழுதுக.

V. 15. பின்வரும் செய்யுளை படித்துணர்ந்து, அதில் அமைந்துள்ள மையக்
          கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து, அதில் அமைந்துள்ள எதுகை,
          மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம்,
          கற்பனை ஆகிய வற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக.

                                     அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா ! - அயல்
                                            ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
                                     இம்ப  ருலகின் இயல்பிதம்மா ! - மதிக்கு
                                            இன்னார் இனியாரும் உண்டோ ? அம்மா !
                                     மாற்றம் உலகின் இயற்கையென - இங்கு
                                           மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
                                     போற்றும் இறைவனின் மாமதியாம் - விண்ணில்;
                                           பூத்து  நிலவ  விதிதனை
                                                                                  -கவிமணி தேசிய விநாயகம்  பிள்ளை

VI. பின்வரும் தொடர்களில் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம்
      தருக.
   
     16. A hog is a armour but still hog
     17. A low hedge is easily leaped over
     18. Bare words buy no barley
     19. Drawn wells are seldom dry.
     20. Rainwater harvest is a must to improve ground water level.
     21. Hunger breaks through stone walls.

VII.22. பின்வரும் பலமொழிகளில் ஒன்றினை விளக்கும் வகையில் வாழ்கை
             நிகழ்வில் அமைத்துப்  பத்துவரிகளில் எழுதுக.

         (அ ) "பதறிய காரியம் சிதறும்"
         (ஆ ) "கெடுவான் கேடு நினைப்பன்
         ( இ ) நுணலும் தன வாயால் கெடும்
                                                                      அல்லது
      சுனாமி அல்லது பூபங்கம் என்னும் தலைப்பில்


VII. பின்வரும்  வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப் பிட்டுள்ளவாறு
      வி டை எழுதுக:                                                                                              

23. நல்லவைகளும் கெட்டவைகளும் பத்திரிகைகளில் வெளிஇடப்படுகின்றன
     ( வாக்கிய பிழையைத்  திருத்துக )

24. கேள்விகள் மாணவர் பயிலா பகுதியில்  இருந்து வந்ததால் பதில் எழுத
       தெரியவில்லை (தேவையான இடத்தில வல்லின மெய் இட்டு எழுதுக )

25. டயாபெடிக் பேஷண்ட் ஸ்வீட்  சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.
      (ஆங்கில சொற்களை நீக்கி இனிய தமிழில் எழுதுக )

26. வாழ்கத் தமிழ் என்று அவனாச் சொன்னான் அறிந்து சொல் எனக்கு
      (தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி எழுதுக)

27. சோறு தின்று பழம் உண்டு பால் சாப்பிட்டுப்  படுத்தான்
      (மரபு வழுஉச்சொற்களை நீக்கி எழுதுக )

28. பறவை இறையாக பயிறு வகைகளைத் திண்ணும்.
      (எழுத்துப் பிழைகளை நீக்கி எழுதுக )

29. உலை -உளை  அல்லது  துணி - துனி
(வேறுபாட்டை உணர்த்தும் வகையில் வாக்கியங்களில் அமைத்து எழுதுக )

30. அப்பசி மாதம் அட மழம்பாக ( கொச்சயான வழுஉச் சொற்களை நீக்கி
      எழுதுக)

31. ஸ்ரீ ரங்கம் : கும்பாபிஷேகம் (நல்ல தமிழில் எழுதுக )

32. ஒருவன் ஒழுக்கத்தை இழந்தவன் என்றால் அனைத்தையும் இழந்தவன் ஆகிறான் என்றனர் அன்றோர் ( நிறுத்தற் குறிகளை இட்டெழுதுக )     




                                                                                                                                   

                                           


                                         











                             

No comments:

Post a Comment