LEAD BY KNOWLEDGE COACHING CENTRE AND TUTORIAL
TAMIL PUBLIC MODEL EXAM -2015
பதிவு எண்
தமிழ் - முதல் தாள்
Language - Part A - Tamil - Paper I
(செய்யுள் , உரைநடை )
நேரம் : 3 மணி ] [ மொத்த மதிப்பெண் : 100
அறிவுரை : (1) அனைத்து வினாக்களுக்கும் சரியாக அச்சுப் பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும் . அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காநிபாளரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
குறிப்பு : (i) விடைகள் தெளிவாகவும் , குறித்த அளவினதாகவும்,
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
(ii) வினா எண் VI -க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில்
அமைதல் வேண்டும்
I. கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும் ஐந்து
வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க: 4x2=8
1. கம்பர் இயற்றிய வேறு நூலால் யாவை ?
2. வெளவாலின் தோற்றத்தைக் கூறுக ?
3. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் - ஏன் ?
4. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை ?
5. அந்தாதி - விளக்குக..
6. சுரதா என்னும் புனை பெயர் எவ்வாறு வந்தது ?
II. கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும்
பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க: 3x4=12
7. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணதை கைகொளல் வேண்டும் ?
8. பயனின் மூப்பிற் சான்றோரின் முதுமைத் தோற்றத்தை கூறுக ?
9. பொறையுடைமையின் சிறப்பினைத் வள்ளுவர் வழி நின்று விளக்குக ?
10. இளங்கோவடிகள் பற்றி குறிப்பு தருக .
11. அனுமன் சீதைக்கு சொன்ன செய்திகள் யாவை ?
III. கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும்
பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க: 3x4=12
12. தாவீதன் கோலியாத்தினை வென்றமை யாங்ஙனம்,யாங்ஙனம்?
13. தலைவி மேகத்திடம் மொழிந்த தூது மொழிகள் யாவை ?
14. சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை ?
15. சிறுவர்களுக்கு தட்டாம்பூச்சி பிடிக்க நேரமில்லாதது ஏன் ?
16. அறிவர்க்கும் அறிவனகியா அருகதேவனை நீலகேசி வழிபட்டமை எவ்வாறு ?
IV. கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் இருபது வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க: 1x8=8
17. அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் தெரிவிக்க பெற்றுள்ள கருத்துகளை
தொகுத்து எழுதுக.
18. இராவணன் வருகையும் அதன்பின் நிகழ்ந்தனவுமாகிய செயல்களை அனுமன் உரைத்த பாங்கினை எழுதுக .
19. காடு என்னும் கவிஞரேறு வாணிதாசன் உரைபனவற்றை எழுதுக.
V. பின்வரும் செய்யுலடிகளின் கீழ்க் கொடுக்கப்பட்டுள வினாக்களுக்கு விடை எழுதுக 4x1=4
20. "நன்மா நுழையின் வேறுபடத் தோன்றி"
(அ ) இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது
(ஆ) இச்செய்யுள் அடிகளின் ஆசிரியர் யார் ?
(இ ) யார் யாரிடம் கூறியது ?
(ஈ ) இச்செய்யுளில் உவமையாக கூறப்பட்டது எது ?
(அல்லது)
21. உனைஒன்று வேண்டுகிறேன் என்னால் ஆவ
(அ ) இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது
(ஆ) இச்செய்யுள் அடிகளின் ஆசிரியர் யார் ?
(இ ) யார் யாரிடம் கூறியது ?
(ஈ ) இது யார் கூற்று ?
VI.22. ஏமவெற் எனத் தொடங்கும் மதுரை கலம்பக பாடலை அடிபிறழாமல்எழுதுக , அதன் பாவகையையும் எழுதுக 4+2=6
23. 'எவ்வ' எனத் தொடங்கும் குறளையும் 'வார்' என முடியும் குறளையும்
அடிபிறழாமல் எழுதுக . 2+2=4
VII.24. எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.2+2=4
(அ ) தருகுவென்
(ஆ) உய்ப்பது
(இ) இறைஞ்சி
(ஈ) அளிக்குவென்
(உ) புனைந்தோம்
(ஊ) அறைந்தாய்
25. எவையேனும் மூன்று சொற்களுக்கு இலக்கணகுறிப்பு தருக. 3x2=6
(அ ) கன்னிபாலன்
(ஆ) அன்புநெறி
(இ) கதுவிடா
(ஈ) ஈர்வளை
(உ) அற்றம்
(ஊ ) வேர்காளை
26. எவையேனும் இரண்டு சொற்களுக்குப் புணர்ச்சி விதி தருக. 2x2=4
(அ) சிலம்பொன்று
(ஆ) பெருங்களிறு
(இ ) பூங்கொடியாள்
(ஈ) பூஞ்சோலை
(உ) முக்குடை
(ஊ )கூர்ம்படை
27. சான்று தந்து விளக்குக 1x4=4
மருதத்திணை
அல்லது
பொருண்மொழக் காஞ்சித் திரை
28. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை "
இக் குறட்பாவில் அமைந்துள்ள அணியை சுட்டி விளக்குக.
அல்லது
சொற்பொருட் பின்வரு நிலையணி அல்லது எடுத்துகாட்டு உவமையணி விளக்குக
VII. பொருத்துக 4x1=4
நூல் ஆசிரியர்
29. குயில் பாட்டு - அப்துல் ரகுமான்
30. அழகின் சிரிப்பு - சுரதா
31. துறைமுகம் - பாரதியார்
32. பால்வீதி - தாராபாரதி
- பாரதிதாசன்.
IX உரிய விடையை தேர்ந்தெடுத்து ஏழுடுக 16x1=16
33. கம்பரை ஆதரித்தவர் --------------------
அ . வள்ளல் சீதக்காதி
ஆ . சடைப்ப வள்ளல்
இ . சங்கரவள்ளல்
34. புரனநூற்றில் குறிப்பிட பட்டுள்ள துறைகள்
அ . 11
ஆ. 65
இ . 75
35. அகநானூற்றுப் பாடல்களின் அடிவரியரறை
அ . 4 அடி முதல் 8 அடி வரை
ஆ . 9 அடி முதல் 12 அடி வரை
இ . 13 அடி முதல் 31 அடி வரை
36. வரி என்பது ---------- பாடல்
அ . சந்தப் பாடல்
ஆ. இசைப்பாடல்
இ . களிப்பாடல்
37. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி
அ . பேரகராதி
ஆ. சதுரகராதி
இ . அரும்பத அகராதி
38. வள்ளுவனை பெற்றதால் பெற்றது புகழ் வையகமே எனப் பாடியவர்
அ . பாரதிதாசன்
ஆ .கவிமணி
இ . பாரதியார்
39. தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேறும் சிலபதிகரம் என்று பாரட்டியவர்
அ. பாரதிதாசன்
ஆ. பாரதியார்
இ . கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
40. உத்ரகாண் டத்தை பாடியவர்
அ . ஒட்டகூத்தர்
ஆ. வான்மீகி
இ . புகழேந்தி புலவர்
41. திவ்யகவி என்ற பெயரால் அழைக்கபடுபவர்
அ . பிள்ளை பெருமாள் ஐயங்கார்
ஆ. ஒட்டகூத்தர்
இ . புகழேந்தி புலவர்
42. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
அ . தேன்மழை
ஆ. குயில்
இ . தென்றல்
43. பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினை பெற்றவர்
அ . பாரதிதாசன்
ஆ . வாணிதாசன்
இ . முடியரசன்
44. கிறித்துவ கம்பர் என அழைக்கப்பட்டவர்
அ . கம்பர்
ஆ. வீரமாமுனிவர்
இ . எச். ஏ . கிருட்டினபிள்ளை
45. தமிழ் பல்கலை கழகதின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்
அ . அப்துல் ரகுமான்
ஆ . சுரதா
இ . தாரா பாரதி
46. உவமை கவிஞர் எனப் பாரட்டபடுபவர்
அ . அப்துல் ரகுமான்
ஆ . சுரதா
இ . தாரா பாரதி
47. சுந்தரர் தேவாரம்
அ . முதலாம் திருமுறை
ஆ. ஏழாம் திருமுறை
இ . பன்னிரெண்டாம் திருமுறை
48. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம்
அ . கலம்பகம்
ஆ. உலா
இ . பள்ளு
X . கோடிட்ட இடத்தை நிரப்புக
49. எந்நன்றி கொன்றார்க்கும் ---------------- உய்வில்லை
செய் நன்றி -------------- மகற்கு
50. எண் பொருள வாகச் ---------------- தான்பிறர் வாய்
நுண்பொருள் ---------- தறிவு
No comments:
Post a Comment