Our New Website Please Visit

Wednesday, 7 January 2015

10th STANDARD TAMIL PUBLIC MODEL EXAM 2015

                       LEAD BY KNOWLEDGE COACHING CENTRE AND TUTORIAL 
                                              TAMIL PUBLIC  MODEL EXAM -2015                                       
      



                                                                                                    பதிவு எண்

                                                       தமிழ் - முதல்  தாள்
                                                 Language - Part A - Tamil - Paper I
                                                    (செய்யுள் , உரைநடை )

நேரம் : 2.30 மணி ]                                                                          [ மொத்த மதிப்பெண் : 100

அறிவுரை :   (1)  அனைத்து வினாக்களுக்கும் சரியாக அச்சுப் பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும் . அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காநிபாளரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.

குறிப்பு : (i)  விடைகள் தெளிவாகவும் , குறித்த அளவினதாகவும்,
                        சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

                 (ii)  வினா எண்  49 -க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில்
                       அமைதல் வேண்டும்

                                                              பிரிவு  -  I
                                                  ( மதிப்பெண்கள் : 20 )

                                                             பகுதி  -  1
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

1. கணிதமேதாவியரின் காலம்
    (அ ) கடைச்  சங்ககாலம்
    (ஆ) சங்கம்  மருவிய காலம்
    ( இ) இடைக்காலம்

2. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்
   (அ) கவிமணி
  (ஆ) பாரதிதாசன்
  (இ ) பாரதியார்

3.  புறநானூறு ------------- நூல்களுள் ஒன்று
  (அ) பத்துபாட்டு
 (ஆ) எட்டுத்தொகை
 (இ ) பதினெண்கீழ்க்கணக்கு

4. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே  அமைந்த`அரிய கலை ------------
(அ ) ஓவியக்கலை  
(ஆ) இசைக்கலை
(இ ) பேச்சிக்கலை

5. பண்னொடு  தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்
 (அ) திருவாசகம்
(ஆ)திருக்குறள்
(இ) தேவாரம்

6.உலகம் என்னும் தமிழ்ச்சொல் --------- என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது
(அ ) உலகு
(ஆ)உலவு
(இ )உளது
                 
                                                               பகுதி - 2

கோடிட்ட இடத்தை நிரப்புக

  7. ---------- என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்

  8. நால்வகைப்  பாக்களும் வயலுக்கு ------------ அமைந்துள்ளன

  9.நாளையிரத் திவ்விய பிரபந்தத்தில் ----------- குலசேகரர் பாடியதாகும்

10.இராமலிங்கர் தமிழ் மொழியே ----------- தரும் என்று கருதினார்

11.தமிழ், மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் --------
     ஆவர்

12. கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் --------------- ஆவர்

                                                     பகுதி - 3
பொருத்துக .

13. கழல்          - சிங்கம்  
14. இந்து          - அணிகலன் 
15. வட்டி         - பனைஒலைபெட்டி
16. மடங்கள்  - நிலவு

                                                      பகுதி - 4

விடைக்கேற்ற வினா அமைக்க.

17.  தமிழர் மனித வாழ்வை அகம், புறம்  எனப்  பிரித்தனர்

18.  காந்தியடிகள் பகவத்கீதையைப் படித்ததன் மூலம்
       மனவுறுதியைப்    பெற்றார்

19. செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருபிடத்திலையே கண்டு
      களிக்கலாம்

20. பெரும்பாலான பணிகளுக்கு அடிபடைத் தகுதி மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி யாகும்

                                                    பிரிவு - II
                                       ( மதிப்பெண்கள் : 20 )

 கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் ஐந்தனுக்கு  மூன்று வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க

21. ஞாலம் கருதினும் கைகூடும். எப்போது ?

22. மாணிக்கவாசகர் குறிப்பு தருக.

23."அன்புள இனி நாம்ஓர் ஐவர்கள் உலரானோம்" - யார், யாரிடம் கூறியது?

24.மூத்த திருநாவுக்கரசுக்கு நேர்ந்ததென்ன?

25. வயல் தரும் விளைவுகள் யாவை ?

26. பகைமை இருளைப் போக்குவது எதுவென வள்ளுவர் கூறுகிறார்?

27. நந்திவர்மன் வீரம் எத்தகையது?

                                                  பகுதி - 2

28. மொழிக்குரிய செவ்வியல் தன்மைகள் யாவை ?

29. கல்விப்படங்களின் வாயிலாக நாம் அறிவன யாவை ?

30. ஏற்றுமதி இறக்குமதி குறித்து கூறும் நூல்கள் யாவை ?

31. கண்ணிடந்து அப்பியவர் யார் ? அவர் வரலாறு உணர்த்தும் செய்தி யாது ?

32. இந்தியாவின் வாழ்வு குறித்து காந்தியடிகள் கூறுவது யாது ?

33. வளரும் பிள்ளைகளுக்கு இராமலிங்கர்  வழங்கிய
      அறிவுரைகள் இரண்டினைக் கூறுக.

34. ஒவ்வொருவரும் குறைந்தது எக் கல்வித் தகுதிகள் பெற்றிருக்க
      வேண்டும் ?

                                                            பிரிவு - III
                                                     ( மதிப்பெண்கள் : 24 )

 கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு ஆறு வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க

35. கண்னகி குறித்து வாயிற்காவலன் கூறியவற்றை எழுதுக.

36. சீதை இலக்குவன் ஆகியோரிடம் குகனைபற்றி ராமன் கூரியதென்ன?

37. தலைவனுக்கு தோழி கூறும் செய்தியினை நற்றிணைப் பாடல்வழித் தொகுத்து எழுதுக

38. புலியின் கொடுஞ்செயல்கள் பற்றி உமறுப்புலவர் கூறுவன யாவை ?

39. சாதனை பூக்கள் என்று எவற்றை இளந்திரையன் கூறுகிறார் ?

                                                                   பகுதி - 2

40. மனக்கொடை குறித்து பெரியார் கூறுவன யாவை ?

41. அம்பேத்கர் பெற்ற கல்வித்தகுதிகள் யாவை ?

42. பேச்சின் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும் ?

43.  கடல் வணிகம் குறித்து  எழுதுக .

44. மனித நேயம் குறித்து காந்தியடிகள் கூரியது  யாது ?

                                                                  பிரிவு -  IV

45. கீழ்க்காணும்  பாடலைப்  படித்து  வினாக்களுக்கு விடையளிக்க:

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைப்படச் சேய  ஆயனும்  தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

(1) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
(2) சேய - பொருள் தருக
(3) சான்றோர் யாருடன் சேருவர்
(4) இப்பாடலை இய்ரியவர் யார் ?
(5) இப்பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளை எடுத்து எழுதுக

46.  கீழ்க்காணும்  உரைநடையை   படித்து  வினாக்களுக்கு விடையளிக்க:

கல்வி  கற்பிபதெற்கென உருவாக்கபடும் படங்கள் கல்விப்படங்கள். பல்வகை விலங்குகளின் வாழ்க்கை, பன்னாட்டு மக்களின் வாழ்கை முதலியவற்றைப்
படம் பிடித்துக் காட்டினால், அதனைக் காணும் மாணவர் கல்வியறிவை எளிதில் பெறுவர். வாழ்க்கையில் நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் பார்பதனை போலவே  காட்டுவதற்குக்  கல்விப்படம் வழி செய்கிறது.

மக்களை தன்பால் ஈர்த்துக் கட்டிபோடும் ஆற்றல் கொண்டது திரை உலகம்.
"கல்லார்க்கும்  கற்றாற்க்கும் களிப்பே" என்னும் வரிகள் திரைபடத்திற் கும்
பொருந்தும். மக்களிடம் மிக எளிதில் சென்று சேரும் ஆற்றல் திரைப்பட
ஊடகங்களுக்கு உண்டு. அதனால், இத்துறை மக்களிடம் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கிறது .

(1) கல்விபடம் எதற்கு வழி செய்கிறது?
(2) எது  மக்களை தன்பால் ஈர்த்துக் கட்டிபோடும் ஆற்றல் கொண்டது?
(3) திரைப்பட ஊடகங்களுக்கு எத்தகைய ஆற்றல் உண்டு?
(4)  கல்விப்படங்கள் என்றால் என்ன ?
(5) இதற்கு பொருத்தமான தலைப்பு தருக ?

                                                                   பிரிவு - V
                                                     ( மதிப்பெண்கள் : 26)

 கீழ்காணும் வினாக்களுக்கு  பத்து  வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க:

47.(அ ) கங்கையின் மறுகரை அடைந்த குகனிடம் ராமன் கூறியவற்றை
      தொகுத்து எழுதுக
                                                  
                                                          (அல்லது)

    (ஆ) பொருள்செயல்வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர்
             கூறும்  வளமார்ந்த கருத்துகளைத் தொகுத்து எழுதுக

48. (அ ) அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை உருவாக்க விரும்பினர் ?
                         
                                                           (அல்லது) 

      (ஆ ) தொழிற்கல்வி தொழில்நுட்ப கல்வி குறித்து விரிவாக எழுதுக

                                                                  பகுதி - 2

49.  செய்யுள் வடிவில் விடைத் தருக
    (அ ) 'எய்தர்' எனத் தொடங்கும் திருகுரளையும்
    (ஆ) 'நிலை' எனத் முடியும்  திருகுரளையும்
    (இ ) 'திருமறையோர்' எனத் தொடங்கும் பெரியப்புராணப் பாடல்
    (ஈ) 'மீன்நோக்கும் ' எனத் தொடங்கும் குலசேகர அழ்வர் பாடல்

No comments:

Post a Comment