Our New Website Please Visit

Thursday, 21 March 2013

10TH STANDARD TAMIL FIRST PAPER

                                                          தமிழ் - முதல் தாள் 
                                                                    பிரிவு -I
                                                                     பகுதி-1

உரிய  விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக :

1.  திருக்குறள் ----------- வெண்பாக்களால்  ஆன  நூலாகும்
     அ ) சிந்தியல்   ஆ ) குறள்   இ ) நேரிசை
2.  ஏலாதி  -----------நூல்களுள்  ஒன்று
    அ ) பதினென் மேற்கணக்கு   ஆ ) பதினென்கீழ்கணக்கு   இ ) காப்பியம்
3.  மருந்துப்  பொருள்களின்  பெயரில்  அமைந்த  இரு  நூல்கள் ------------,---------
    அ ) திருக்குறள் ,நன்னூல்   ஆ ) திரிகடுகம் ,ஏலாதி
    இ ) நற்றிணை ,அகநானூறு 
4.  குடும்ப  விளக்கு ---------படைப்புகளுள்  ஒன்று
     அ ) பாரதியார்   ஆ ) பாரதிதாசன்   இ ) சுரதா
5.  'நல் ' என்னும்  அடை மொழி  பெற்ற  நூல் ---------
     அ ) அகநானூறு   ஆ ) நற்றிணை  இ ) கலித்தொகை
6.  நற்றிணையைத்  தொகுப்பித்தவர்  ---------------
    அ ) பன்னாடு  தந்த  மாறன்  வழுதி   ஆ ) இளம்பெருவழுதி
    இ )  உக்கிரப்பெருவழுதி
7.  சேக்கிழார்  பெருமான்  அருளியது ------------
     அ ) சிவபுராணம்   ஆ ) பெரியபுராணம்   இ ) தலபுராணம்
8.  பக்திச்சுவை  நனி  சொட்டச்  சொட்டச்  பாடிய  கவிவலவ  எனப்  பாடியவர்
     அ ) பெ . சுந்தரனார்   ஆ ) மகாவித்துவான்  மீனாட்சி  சுந்தரனார் 
     இ ) கவிஞர்  வெ. இராமலிங்கனார்
9.  அரியவற்றுள்  எல்லாம்  அரிது  -------------பேணித் தமராக்கொளல்
     அ ) சிறியவர்   ஆ ) பெரியார்   இ ) உறவினர்
10. திருநாவுக்கரசர்  காலம்  -------------ஆம்  நூற்றாண்டு
     அ ) கி.பி 12  ஆ )கி .பி 7  இ ) கி .பி 9
11. கேழல் என்பதன்  பொருள்  --------------
      அ ) எருமை   ஆ ) புலி   இ ) பன்றி 
12. நெய்தல்  கலியைப்  பாடியவர் ----------------
      அ ) ஓரம்போகியார்   ஆ ) கபிலர்   இ ) நல்லந்துவனார் 
13. பணை  என்னும்  சொல்லின்  பொருள் -----------
      அ ) அரசு   ஆ ) ஆல்   இ ) மூங்கில் 
14. குலசேகராழ்வார்  பாடல் ---------தொகுப்பில்  உள்ளது
      அ ) திருவியற்பா   ஆ ) முதலாயிரம்   இ ) பெரிய  திருமொழி
15. பதினாறு  செவ்வியல்  தன்மைகளைக்  கொண்டது  செம்மொழி
     எனக்  கூறியவர்  ----------------
     அ ) திரு .வி .க   ஆ ) உ .வே .சா   இ ) பாவாணர் 
16. அரசின்  அனைத்துத்  துறைகளிலும்  பெண்கள்  பணியாற்றும்  போது
      நம்  சமுதாயத்தில்  புரட்சி  ஏற்படும்  என்றவர்
      அ ) திரு .வி .க   ஆ ) பெரியார்   இ ) பாரதிதாசன்
17. அம்பேத்கருக்கு  இந்திய  அரசு  வழங்கிய  விருது  ------------
      அ ) பத்மஸ்ரீ   ஆ ) பாரதரத்னா   இ ) பத்மவிபூஷன்
18. பண்ணொடு  தமிழொப்பாய்  எனத்  தொடங்கும்  பாடல்  இடம்  பெறும்  நூல்
     அ ) திருவாசகம்   ஆ ) திருக்குறள்   இ ) தேவாரம் 
19. உலகம்  என்னும்  தமிழ்ச்சொல் ----------------- என்னும்
     சொல்லின்   அடியாகப்  பிறந்தது
     அ ) உலகு   ஆ ) உலவு   இ ) உளது
20. உலகெலாம்  உணர்ந்து  ஓதற்கரியவன்  எனத்  தொடங்கும்  பாடல்
      இடம்  பெற்றுள்ள  நூல்  --------------------
      அ ) கந்தபுராணம்   ஆ ) சீறாப்புராணம்   இ ) பெரியபுராணம் 
21. விரல்கள்  பத்தும்  மூலதனம் என்னும்  பாடலின்  ஆசிரியர்  ---------------
      அ ) பாரதியார்   ஆ ) பாரதிதாசன்  இ ) தாரா  பாரதி 

                                                             பகுதி  - 2
கோடிட்ட  இடத்தை  நிரப்புக :
  1. மாணிக்கவாசகர்  அரிமர்த்தன  பாண்டிய
      மன்னரிடம்  தலைமையமைச்சராகப்  பணியாற்றியவர்
  2. அரி  என்னும்  சொல்லின்  பொருள்  நெற்கதிர்
  3. திருநாவுக்கரசர்  அருளிய  பாடல்கள்  தேவாரம்  என  வழங்கப்படுங்கிறது
  4. கலம்பகம்  தொண்ணூற்றாறு  வகைச் சிற்றிலிக்கியங்களுள் ஒன்று
  5. தார்  வேந்தன்  கோல்  நோக்கி  வாழும்  குடி  போன்றிருன்தேனே
  6. பணை  என்னும்  சொல்லின்  பொருள்  மூங்கில்
  7. திருநாவுக்கரசரை  அப்பர் என்றும்  அழைப்பர்
  8. தமிழுக்கு  கதி  என  குறிப்பிடப்படும்  நூல்கள்
     திருக்குறள் ,  கம்பராமாயணம் 
  9. இலெமூரியாவை  மனித  நாகரிகத்  தொட்டில்  என்பர்
10. தமிழ்  மிகவும்  பண்பட்ட  மொழியெனக்  கூறிய  மொழியியல்  அறிஞர்
      மாக்சுமுல்லர்  ஆவார்
11. திருக்குறளை  மொழி  பெயர்த்த  உருசிய  அறிஞர்  தால்சுதாய் 
12. சங்ககாலத்தில்  பெண்கள் கடல்  கடந்து  செல்லக்கூடாது

                                                            பகுதி  - 3

பொருத்துக :
  1. இடர்                    - நிலவு 
      நாவாய்              - துன்பம் 
     இறை                   - படகு 
     இந்து                    - தலைவன்
  
  2. கான்                    - கரடி 
      உழுவை            - சிங்கம் 
      மடங்கல்           - புலி 
      எண்கு                 - காடு 

  3. தேவாரம்                  - உமறுப்புலவர் 
      சீறாப்புராணம்        - நல்லந்துவனார் 
      கலித்தொகை          - சாலை  இளந்திரையன்
      பூத்தது  மானுடம்   - திருநாவுக்கரசர் 

  4. செருக்கு                     - காடு 
      கான்                             - இறுமாப்பு
      வேதனை                   - தொங்குதல்
      ஞாலுதல்                   - துன்பம் 

  5. ஈஸ்ட்மன்                        - ஒருவர்  மட்டும்  பார்க்கும்  படக்  கருவி 
      எடிசன்                               - படச்சுருள்
      எட்வர்டு மைபிரிட்சு    - கருத்துப்படம்
      வால்ட்  டிஸ்னி             - இயக்கப்படம் 

  6. சத்திய  சோதனை        - திருவள்ளுவர் 
      பகவத்கீதை                     - கிறித்துவ  சமயநூல்
      திருக்குறள்                      - காந்தியடிகள் 
      பைபிள்                              - இந்து  சமய  நூல்


                                                              பகுதி  - 4

விடைக்கேற்ற  வினா  அமைக்க :
  1. பெண்கள்  உரிமை  பெற்றுப் புது  உலகைப்  படைக்க  வேண்டும் 
      என்று   விரும்பியவர்   பெரியார்
  2. செய்திப்படங்கள்  வாயிலாக  நிகழ்வுகளை  நம் இருப்பிடத்திலேயே 
      கண்டு  களிக்கலாம் 
  3. நடிப்புக்  கலையையும்  அரசியலையும்  தம்  இரு  கண்களாக எம் .ஜி .ஆர் 
      கருதினார் 
  4. காந்தியடிகள்  பலகோடி  மக்களின்  பட்டினியைப்  போக்கும்  வாழ்வாதாரம் 
      கதர்  என்று  கருதினார் 
  5. தொழில்  நுட்பப்  பயிலகத்தில் பயில்வோர்க்கு  
      நிறைய  வேலைவாய்ப்புகள்  உள்ளன .
              
                                                                 பிரிவு  -   II
                                                                   பகுதி  - 1
கீழ்க்காணும்  வினாக்களுள்  எவையேனும்  ஐந்தனுக்கு  மூன்று  வரிகளுக்கு 
மிகாமல்  விடையளிக்க : 
  1. இறைவனை  வாழ்த்தும்  போது  மாணிக்கவாசகர்  எந்நிலையில்  
      இருந்தார் ?
  2. நன்றிக்கு  வித்தாவது  எது ?
  3. ஞாலம் கருதினும்  கைகூடும் . எப்போது ?
  4. காலமறிந்து  செயல்படுவது  எவ்வாறு ?
  5. பழியில்லா  மன்னனாய்  வாழ்பவனின்  பண்புகளாகக்  கணிமேதாவியார் 
      குறிப்பிடுவன யாவை ?
  6. சிலம்பு  உணர்த்தும்  முப்பெரும்  உண்மைகள்  யாவை ?
  7. பாரதிதாசனின்  படைப்புகள்  நான்கினை  எழுதுக .
  8. குகன்  இராமனைக்  கண்டு  எவ்வாறு  பணிந்து  வணங்கினான் ?
  9. சான்றோர்  யாருடன்  சேர்வர் ?
10. திருநாவுக்கரசர் அப்பூதியடிகளிடம்  வினவிய  தென்ன ?
11. வயலின்  வரப்புகளாகக்  கூறப்படுபவை  யாவை ?
12. வன்மையுள்  எல்லாந்  தலையாயது  எது ?
13. பொருளல்லவரைப்  பொருளாகச்  செய்வது  எது ?
14. வேந்தற்குரிய  பொருள்கள்  எவை ?
15. முகம்மது  நபியை  வணங்கியவன்  கூறிய  செய்தி  யாது ?
16. நல்லார்  தொடர்பு  கைவிடல்  எத்தன்மைத்து ?
17. கலம்பக  நூல்களுள்  முதல்நூல்  எது ?
18. எப்படி  நடந்திட வேண்டுமென  இளந்திரையன்  கூறுகிறார் ?

                                                           பகுதி  - 2

19. தொல்காப்பியம்  குறித்து  முனைவர்  எமினோ  கூறுவது  யாது ?
20. மொழிக்குரிய  செவ்வியல்  தன்மைகள்  யாவை ?
21. ஒரு  மொழி  நிலைபெற்று  நிற்பதற்குத்  தகுதிப்பாடுகள்  யாவை ?
22. ஒழுக்கம்  குறித்துப்  பெரியார்  கூறுவன  யாவை ?
23. அம்பேத்கர்  குறித்து  நேரு  புகழ்ந்து கூறியது  யாது ?
24. கல்விப்படங்களின்  வாயிலாக  நாம்  அறிவன  யாவை ?
25. மருந்தில்லா  மருத்துவம்  பற்றித்  திருவள்ளுவர்  கூறுவதென்ன ?
26. காந்தியடிகளின்  அறவழிப்  போராட்டத்தில்  உருவான  இயக்கங்கள் 
      யாவை ?
27. தற்போது  வளர்ந்து  வரும்  இரண்டு  தொழில்நுட்பத்  துறைகள்  யாவை ?
28. எவற்றை  அறநெறியாகப்  போற்ற  வேண்டும்  என்று  காந்தியடிகள்
      கூறினார் ?
29. இயேசுவின்  மலைப்  பொழிவு  நூலைப்  படித்துக்  காந்தியடிகள் 
      உணர்ந்தது  என்ன ?
30. மொழிமாற்றம்  என்றால்  என்ன ?      

                                                           பிரிவு  -  III
                                                             பகுதி  - 1

கீழ்க்காணும்  வினாக்களுள்  எவையேனும்  மூன்றனுக்கு  ஆறு  வரிகளுக்கு 
மிகாமல்  விடையளிக்க  :

  1. மாணிக்கவாசகர் , இறைவனிடம்  எவ்வாறு  வேண்டுகிறார் ?

  2. காலமறிந்து  செயல்படுதலால்  வரும்  பயன்  யாது ?
  3. கண்ணகி  குறித்து  வாயிற்காவலன்  கூறியவற்றை  எழுதுக 
  4. சிலப்பதிகாரம்  காட்டும்  சோழநாட்டு  மன்னர்களின்  சிறப்புகள்  யாவை ?
  5. தமிழ்மொழி  வளர்ச்சி  அடைவதற்குப்  பாரதிதாசன்  கூறும் வழிவகைகள்  
      யாவை ?
  6. விருத்தமாதவரை  நோக்கி  இராமன்  கூறியவை  யாவை ?
  7. சான்றோர்  நட்புக்கு  உவமையாகக்  கூறப்படுவன  யாவை ?
  8. தண்ணீர்ப்பந்தலைக் கண்டு  நாவுக்கரசர்  வியப்புறக்  காரணம்  என்ன ?
      அப்பூதியடிகளாரிடம்  அவர்  யாது  வினவினார் ?
  9. வயல்  தரும்  விளைவுகளாகத்  தமிழ்விடு  தூது  கூறுவன  யாவை ?
10. பொருளினது  சிறப்பாக வள்ளுவர் கூறுவது யாது ?
11. பொருளீட்டுவதால்  ஏற்படும்  பயன்கள்  யாவை ?
12. நபிகள்  நாயகத்தைக்  கண்ட  புலியின்  நிலையை  எழுதுக 
13. 'சாதனைப் பூக்கள் ' என்று  எவற்றை  இளந்திரையன்  சுட்டுகிறார் ?
                                                               
                                                           பகுதி  - 2
கீழ்க்காணும்  வினாக்களுள்  எவையேனும்  மூன்றனுக்கு  ஆறு  வரிகளுக்கு 
மிகாமல்  விடையளிக்க  :
  1. தமிழ்மொழியின்  இலக்கணச்  சிறப்பை  எழுதுக .
  2. பெண்கல்வி  குறித்துப்  பெரியார்  கூறும்  கருத்துகள்  யாவை ?
  3. கல்வி  வளர்ச்சிக்கு  அம்பேத்கர்  ஆற்றிய  பணி  யாது ?
  4. பேச்சுக்கலையில்  மொழியும்  முறையும்  எவ்வாறு  அமைதல்வேண்டும் ?
  5. கருத்துப்படம்  பற்றி  விளக்கி  எழுதுக 
  6. உழவுத்தொழில்  குறித்து  எழுதுக 
  7. சித்தமருத்துவம்  குறித்து  செய்திகளை  எழுதுக
  8. அணுபற்றிய  கம்பரின்  கருத்து  யாது ?
  9. மனிதநேயம்  குறித்துக்  காந்தியடிகள்  கூறியது  யாது ?
10. இராமலிங்கரின்  உயிரிரக்கம்  பற்றிய  கருத்துகளை  எழுதுக 
11. சிறுதொழிற்பயிற்சி பற்றிக்  குறிப்பு  எழுதுக 
                                                        
                                                            பகுதி  -  IV
கீழ்க்காணும்  பாடலைப்  படித்து  வினாக்களுக்கு  விடையளிக்க :
  1. குட்டிச்  செவியறுத்துக்  கூட்டித்  தலைகளெல்லாம் 
      வெட்டிக்  களைபறிக்க  மேலாய்த்தூர்  - கட்டி 
      வளர்ந்தனை  பால்முந்திரிகை  வாழைக்  கனியாய்க் 
      கிளர்ந்தகரும்  பாய்நாளி  கேரத்து  - இளங்கனியாய்
      i) இப்பாடல்  இடம்  பெற்ற  நூல்  எது ?
     ii) இப்பாடல்  ஆசிரியரின்  பெயர்  யாது ?
    iii) இப்பாடலில்  இடம்  பெற்றுள்ள  அடியெதுகைகளை எடுத்தெழுதுக 
    iv) செவியறுத்து  - பிரித்து  எழுதுக 
    v) நாளிகேரம்  - பொருள்  கூறுக 
  2. நெடிய  மொழிதலும்  கடிய  ஊர்தலும் 
      செல்வம்  அன்றுதன்  செய்வினைப்  பயனே 
      சான்றோர்  செல்வம்  என்பது  சேர்ந்தோர்
      புன்கண்  அஞ்சும்  பண்பின் 
      மென்கண்  செல்வம்  செல்வமென்  பதுவே     
      i) இப்பாடல்  இடம்  பெற்ற  நூல்  எது ?
     ii) இப்பாடல்  ஆசிரியரின்  பெயர்  யாது ?
    iii) இப்பாடலில்  இடம்  பெற்றுள்ள  அடியெதுகைகளை எடுத்தெழுதுக 
    iv) செய்வினைப்   - பிரித்து  எழுதுக 
    v) புன்கண்  - பொருள்  கூறுக 

  3. கீழ்க்காணும்  உரைப்பகுதியைப்  படித்து  வினாக்களுக்கு  விடையளிக்க :
     மருத்துவம் ,பொறியியல் ,வேளாண்மை ,சட்டம்  முதலியவை 
     தொழிற்கல்வித் துறைகள் . மேனிலைக்  கல்வியில்  உயர்மதிப்பெண் 
     பெற்றோர்  அந்தந்தப்  பாடப்  பிரிவின்  தகுதிக்கேற்ப  விண்ணப்பிக்கலாம்.
     இவர்கள் கலந்தாய்வு  மூலம்  தேர்வு  செய்யப்பட்டுக்  கல்லூரிகளில் 
     சேர்ந்து  உரிய  காலத்தில்  படித்து  முடிப்பர் . படித்து  முடித்தவர்கள்  
     அவரவர் தகுதிக்கேற்ப  உள்நாட்டிலும்  வெளிநாட்டிலும்  பணிபுரியும் 
     வாய்ப்புண்டு .
     தற்போது   உயிரி -தொழில்நுட்பத்துறை , நுண்ணியல் தொழில்நுட்பத்துறை
     நுண்ணியல்  தொழில்நுட்பத்துறை  சார்ந்த  தொழிற்படிப்புகள்  
     கற்பிக்கப்பட்டு   வருகின்றன . வேதியியல், விலங்கியல்  துறைகளில் 
     இளங்கலைப்  பட்டம்   பெற்றவர்களுக்கும் ,சுற்றுச்  சூழல் ,வேளாண்மை ,
     மருத்துவம்  முதலிய  துறைகளில்  பட்டம்  பெற்றவர்களுக்கும்  சிறந்த  
     வேலை  வாய்ப்புத்  துறையாகத்  தற்போது  இது  விளங்கி  வருகிறது .
     i) தொழிற்கல்வித்  துறைகள்  யாவை ?
    ii) தொழிற்  கல்வித்  துறையில்  நுழைவதற்கான  கல்வித்  தகுதி  யாது ?
   iii) தொழில்  நுட்பக்  கல்லூரிகளில்  மாணவர்கள்  எம்முறை  மூலம்  தேர்வு 
        செய்யப்படுகின்றனர் ? 
   iv) உயிரி - தொழில்நுட்பத்  துறையின்  சிறப்பம்சம்  யாது ?
    v) இவ்வுரைப்  பகுதிக்குப் பொருத்தமான  தலைப்பு  தருக .

                                                               பிரிவு  - v
                                                                பகுதி -1
கீழ்க்காணும்  வினாக்களுக்குப்  பத்து  வரிகளுக்கு  மிகாமல்  விடையளிக்க :
  1. "தேரா  மன்னா " என  விளித்துக்  கண்ணகி  கூறியன  யாவை ?  
  2. குகனுக்கும்  இராமனுக்கும்  நடைபெற்ற  உரையாடலைத்  
      தொகுத்தெழுதுக 
  3. கண்ணகிக்கும்  பாண்டிய  மன்னன்  நெடுஞ்செழியனுக்கும்  நடந்த 
      சொற்போரினை  உரையாடலாக  அமைத்து  எழுதுக .
  4. பொருளினது  சிறப்பு ,பொருளீட்டும்  நெறி ,பொருளீட்டுவதால்  ஏற்படும் 
      பயன்கள்  குறித்து  வள்ளுவர்  கூறும்  கருத்துக்களைத்  தொகுத்து  எழுதுக .
  5. கலை  அறிவியல்  கல்வி , சிறுதொழில்  கல்வி  குறித்து  விவரிக்க :
  6. செம்மொழிக்குரிய  எவையேனும்  ஐந்து  தகுதிப்பாடுகளை  விளக்கி  
      எழுதுக .
  7. பெண்  முன்னேற்றத்திற்குத்  தடையாக  உள்ளனவாகப்  பெரியார்  
      கூறுவனவற்றை  எழுதுக .
       
            
      
     



2 comments:

  1. மும்மருந்து என்று குறிப்பிடப்படும் நூல் எது?

    ReplyDelete